மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் உச்சக்கட்ட போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெறவுள்ள மிக முக்கியமான லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்காவும் லெபனானும் இஸ்ரேலிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆக்சியோஸ் (Axios) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டுமானால் போர் நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான் மீதான தாக்குதல்களைப் பகுதியளவு நிறுத்துவதற்கு ஒப்புக்கொள்ளக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலின் இந்தச் சாத்தியமான போர் நிறுத்த முடிவு பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.