டெல்லி போன்ற நெரிசல்மிக்க பெருநகரச் சாலைகளில் கார் ஓட்டுபவர்களைக் குறிவைத்து, “கீழே உங்கள் பணம் விழுந்து கிடக்கிறது” என்று ஆசை காட்டி சில நொடிகளில் காரில் இருக்கும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடிக்கும் ஒரு புதிய ஆபத்தான கேங் தற்பொழுது அசுர வேகத்தில் பரவி வருகிது.
றபிரபல சமூக வலைத்தள இன்ஃபுளூயன்சரும் கன்டென்ட் கிரியேட்டருமான துஷார் பல்லா (Tushar Bhalla) என்பவர் தனக்கு நேர்ந்த இந்த பகீர் மோசடி அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்து ஒட்டுமொத்த கார் ஓட்டுநர்களையும் அலர்ட் செய்துள்ளார். அவர் தனது காரை நிறுத்தியிருந்த போது, மர்ம நபர் ஒருவர் காரின் கண்ணாடியைத் தட்டி, “சார், கீழே உங்களுடைய பணம் நிறையக் கொட்டிக் கிடக்கிறது” என்று காட்டியுள்ளார்.
View this post on Instagram
தரையில் கிடந்த பணத்தை எடுக்கத் துஷார் காரை விட்டு இறங்க முயன்ற போது, அவரது உள்மனசு (Gut feeling) ஏதோ ஆபத்து இருப்பதை உணர்த்தியுள்ளது. உடனடியாக காரின் பக்கவாட்டு கண்ணாடிகளில் (Side Mirrors) அவர் கவனித்த போது, காரின் பின்னால் மற்றொரு நடுத்தர வயது நபர் காரின் கதவு அன்லாக் ஆனவுடன் உள்ளே இருக்கும் லேப்டாப் பேக்கைத் திருடுவதற்காகக் காத்துக்கொண்டிருந்த அநியாயத்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.
டெல்லி போன்ற பரபரப்பான சாலையில் யாரும் நமக்கு இலவசமாகப் பணம் கொடுக்க மாட்டார்கள் என்ற சாதுரியமான சிந்தனையால், தனது விலைமதிப்பற்ற லேப்டாப் கொள்ளையடிக்கப்படுவதில் இருந்து தப்பியதாக அவர் கூறியுள்ளார்.
தரையில் கிடக்கும் பணத்தைப் பார்த்தவுடன் காரில் இருந்து உடனடியாகக் கீழே இறங்கிப் பார்ப்பது மனித இயல்புதான் என்றாலும், அத்தகைய நேரங்களில் கார் கதவுகளைப் பூட்டி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் விடுத்துள்ள விழிப்புணர்வு வீடியோ தற்பொழுது 3.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களின் பாராட்டுகளுடன் இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
