சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,13,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,409 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,272 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
