சாலையோரங்களிலும் மெட்ரோ நிலையங்களுக்கு வெளியேயும் மிகவும் பரிதாபமாகத் தோற்றமளிக்கும் பிச்சைக்காரர்களை நாம் பார்த்திருப்போம். அவர்களின் காயமடைந்த முகத்தைப் பார்த்து இரக்கப்பட்டுப் பணம் கொடுப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பிச்சை எடுப்பதற்காக இழைக்கப்படும் அதிர்ச்சிகரமான மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒரு சிறுவனின் முகம் தீயினால் கருகியது போலக் காட்சியளித்த நிலையில், அங்கிருந்த ஒருவர் அந்தச் சிறுவனின் முகத்தில் ஒட்டப்பட்டிருந்த ‘மேக்கப்’ பகுதியை மிக எளிதாகப் பிரித்து எடுக்கிறார். அதன் அடியில் அந்தச் சிறுவனின் முகம் எவ்வித காயமும் இன்றி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “இந்த மோசடிக்காரர்களின் மேக்கப் திறமை வியக்க வைக்கிறது” என்று கிண்டலாகக் கருத்து தெரிவிப்பதோடு, இத்தகைய ஏமாற்று வேலைகளால் உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
View this post on Instagram
“>
“இதுபோன்ற மோசடிக்காரர்களுக்கு இனி ஒரு பைசா கூடத் தர்மம் செய்யக்கூடாது” என்று மக்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர். இச்சம்பவம், சாலையில் நாம் பார்க்கும் உருக்கமான தோற்றங்கள் அனைத்தும் உண்மை அல்ல என்பதைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
