சமூக வலைதளங்களில் தினமும் விதவிதமான வீடியோக்கள் வைரலானாலும், தற்போது சிப்ஸ் பாக்கெட்டை வைத்து ஒரு இளைஞர் செய்துள்ள ‘பிராங்க்’ வீடியோக்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த வீடியோவில், கடைக்கு செல்லும் ஒரு இளைஞர் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிவிட்டு, தன்னிடம் ஆன்லைனில் பணம் செலுத்த முடியவில்லை என கூறுகிறார். பின்னர் கடைக்காரரிடம், “இந்த பாக்கெட்டுக்குள் பணம் இருக்குமா?” என கேட்டுவிட்டு, அவர் வேண்டாம் என்று சொல்லியும் பாக்கெட்டை பிரிக்கிறார்.
Aunty got traumatized pic.twitter.com/9AAC9ujDKQ
— Meme Supplier (@ImMemesupplier) April 8, 2026
அதிர்ச்சியாக அந்த பாக்கெட்டுக்குள் இருந்து 100 ரூபாய் நோட்டு வெளிவர, அதைக்கண்டு கடைக்காரர்கள் மிரண்டு போகின்றனர். இதே பாணியில் அவர் மற்றொரு கடையிலும் செய்து கடைக்காரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். உண்மையில், இது அந்த இளைஞர் முன்கூட்டியே திட்டமிட்டு செய்த ஒரு சுவாரஸ்யமான ‘பிராங்க்’ வீடியோ ஆகும். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன.
Aunty got traumatized pic.twitter.com/Du3wYZfPW4
— Man Being Happy 😁 (@ManBeingHappy) April 8, 2026
