மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் (Toll Gates) வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்கள் FASTag அல்லது UPI மூலம் மட்டுமே கட்டணத்தைச் செலுத்த முடியும்.

ஒருவேளை உங்கள் வாகனத்தில் FASTag இல்லையென்றால், UPI மூலம் பணத்தைச் செலுத்தலாம்; ஆனால், அவ்வாறு செலுத்தும்போது வழக்கமான சுங்கக் கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதல் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என அரசு எச்சரித்துள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.