உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அமன் குப்தா என்ற ஜிலேபி வியாபாரி கண்டுபிடித்துள்ள வினோதமான சாமர்த்தியமான வழி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களாக சிலிண்டர் கிடைக்காததால் தனது கடையை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அமன், இணையதள உதவியுடன் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார்.
பயன்படுத்தப்பட்ட பழைய எஞ்சின் ஆயிலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ஒரு சிறப்பு அடுப்பை அவர் தயாரித்துள்ளார். வாகனங்களில் இருந்து வீணாகக் கீழே ஊற்றப்படும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தி, எரிவாயு சிலிண்டர் இல்லாமலேயே தற்போது அவர் ஜிலேபிகளைத் தயாரித்து வருகிறார்.
இந்த வினோத அடுப்பைப் பார்ப்பதற்காகவே அமன் குப்தாவின் கடைக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழைய எஞ்சின் ஆயில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாலும், சில நேரங்களில் இலவசமாகக் கிடைப்பதாலும் தனது லாபம் அதிகரித்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
அதேவேளையில், இந்த வகை எண்ணெயைச் எரிப்பதால் ஏற்படும் புகை சுற்றுசூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்ற கவலையையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
Prayagraj, Uttar Pradesh: Amid LPG shortages, a shopkeeper, Aman Gupta in Prayagraj has developed an innovative stove that runs on waste engine oil. pic.twitter.com/lVD4kk45Wg
— IANS (@ians_india) March 31, 2026
“>
எது எப்படியோ, ஒரு இக்கட்டான சூழலில் முடங்கிவிடாமல் தனது அறிவைப் பயன்படுத்தி வேலையைத் தொடரும் இந்த ஜிலேபி வியாபாரியின் முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
