ஈரான் போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே போர் நிறுத்தத்திற்குச் சம்மதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மத்தியஸ்தர்களுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஒருவேளை ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஈரானை முற்றிலுமாக அழித்து கற்காலத்திற்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், டிரம்பின் இந்தக் கூற்றுகளை ஈரான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவிதமான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், டிரம்பின் அறிக்கைகள் வெறும் கற்பனை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை நம்ப முடியாது என்றும், எதிரிகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி எப்போதும் மூடப்பட்டே இருக்கும் என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்தச் சூழலில், இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதால், போர் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
