மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் 22 வயது இளைஞரான மனோஜ் ரஜக் என்பவர், இன்ஸ்டாகிராம் நேரலையில்  தனது தற்கொலையை ஒளிபரப்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை மறுமணம் செய்துகொண்டதாலும், பின் தந்தையும் உயிரிழந்ததாலும் மனோஜ் தனியாக வாடகை அறையில் வசித்து வந்துள்ளார்.

துணிக்கடை உதவியாளராக வேலை செய்துகொண்டே, தனது அறையிலிருந்தே ஆடைகளை விற்றுத் தனது வாழ்வாதாரத்தைக் கவனித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சோகமான பாடலை ஒலிக்கவிட்டு, தனது நண்பர்களுக்கு நேரலையில் பிரியாவிடை கூறிவிட்டு அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

நேரலையைப் பார்த்த அவரது நண்பர்கள் பதறியடித்துக்கொண்டு அறைக்கு விரைந்தனர், ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். காதலில் ஏற்பட்ட தோல்வி அல்லது குடும்பச் சூழல் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் அவர் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

“>

 

காவல்துறையினர் அவரது செல்போனைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறையான தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி தற்கொலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.