கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெட்டட பைரவேஸ்வரா கோயில் அருகே, திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. ஒரு ஜோடி தங்களது புகைப்படக் கலைஞர்களுடன் அங்கு சென்றிருந்தபோது, அங்கிருந்த உள்ளூர்வாசிகள் சிலர் கோயில் பகுதியில் புகைப்படம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, புகைப்படக் கலைஞர்கள் காலணி அணிந்து கோயில் வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், புகைப்படக் கலைஞர்களான நவி மற்றும் நந்தன் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் அவர்களது கேமராவும் சேதமடைந்தது. காயமடைந்த இருவரும் சக்லேஷ்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sakleshpura, Karnataka: A pre-wedding photoshoot at Bettada Bhairaveshwara Temple turned violent after an altercation, with locals thrashing photographers.
7 people have been taken into custody.pic.twitter.com/CMY6GdEagm
— Shilpa (@shilpa_cn) March 28, 2026
“>
இது குறித்து வழக்குப் பதிவு செய்த சக்லேஷ்பூர் கிராமப்புற காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட பிரசாந்த், அரவிந்த் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
