தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை (எஸ்.பி.) தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து வருகிறது.

ஏற்கனவே கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளை மாற்றிய நிலையில், இன்று மேலும் 4 மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி மற்றும் தஞ்சை மாவட்ட எஸ்.பி.க்கள் உடனடியாக மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்திற்கு ஜவஹர், பெரம்பலூருக்கு பிரபாகர், தஞ்சைக்கு சுந்தரவதனம் மற்றும் தென்காசிக்கு மயில்வாகனன் ஆகியோர் புதிய எஸ்.பி.க்களாகப் பொறுப்பேற்க உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் நேர்மையான முறையில் பணிகளை மேற்கொள்ளவும், புகார்களுக்கு இடமளிக்காமல் இருக்கவும் இந்த அதிரடி ஆக்ஷனை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.