தமிழகப் பெண்களை மிகவும் இழிவாகப் பேசிய திமுக ஆதரவாளர் பொன்ராஜின் கருத்துக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்களை “விபசாரிகள்” என்று விமர்சித்த அவர், அதற்கு மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
திமுகவினரின் இத்தகைய அருவருப்பான பார்வைதான் கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்றும், மறைந்த அப்துல் கலாமின் உதவியாளர் என்று கூறிக்கொள்ளும் பொன்ராஜின் பேச்சு, ஐயா கலாமின் கண்ணியத்திற்கே இழுக்கு ஏற்படுத்துவதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
<a href=”http://
தமிழகப் பெண்களை “விபச்சாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ்.
திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி உள்ளார்… pic.twitter.com/KeoVtcmR0p
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) March 26, 2026
“>
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முதல் பொன்ராஜ் வரை பெண்களைத் தரக்குறைவாகப் பேசுபவர்களின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும் என்றும், பெண்களின் நலன் காக்கப்பட வேண்டுமானால் வரும் தேர்தலில் திமுக வீழ்த்தப்பட வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ள அதிமுக, தமிழகப் பெண்கள் தங்களை ஆள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
