இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதியைத் தங்கள் நாடு கொன்றுவிட்டதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கைக்கு அவரே தலைமை தாங்கியதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளார்.
எனினும், இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரானும் இது குறித்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
ஒருவேளை இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனக் கருதப்படுகிறது. உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாகவே தினமும் பெருமளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.
25 நாட்களாக நீடித்து வரும் இந்தப் போரில், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அது பெரும் பதற்றத்தை உருவாக்கும்.
