2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ள நிலையில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சக வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையாற்றியுள்ளார்.
கடந்த சீசனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற உத்வேகத்துடன் களம் காணும் ஆர்சிபி அணி, இந்த முறையும் கோப்பையைத் தக்கவைக்கத் தீவிரமாக உள்ளது. இதுகுறித்து பேசிய கோலி, “கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றது நமது கடின உழைப்பிற்கு கிடைத்த பலன்.
ஆனால் இந்த முறை மற்ற அணிகள் நமக்கு எதிராகக் கடும் சவால் அளிக்கும் என்பதால், நாம் நமது 120 சதவீத செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்” என்று வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பயிற்சி நேரத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும், அடுத்த இரண்டரை மாதங்கள் முழு அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும் என்றும் கோலி வலியுறுத்தியுள்ளார்.
இந்த சீசனை முன்னிட்டு வெங்கடேஷ் ஐயர், மங்கேஷ் யாதவ் உள்ளிட்ட புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து ஆர்சிபி நிர்வாகம் அணியைப் பலப்படுத்தியுள்ளது.
நடப்பு சாம்பியனாக களம் இறங்கும் ஆர்சிபி அணி, வரும் 28-ஆம் தேதி தனது முதல் லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது.
