கேரள மாநிலத்தை சேர்ந்த அனந்து பிரசாத் (24) மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரிசானா பாத்திமா (19) ஆகிய இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய ரிசானா, தனது நண்பர் அனந்து பிரசாத்துடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தலில் இறங்கியுள்ளார்.
இவர்கள் இருவரும் தினமும் மூவாயிரம் ரூபாய் வாடகை கொண்ட சொகுசு ஹோட்டல் அறைகளில் தங்கி மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களின் செயல்பாடுகள் குறித்து ரகசியத் தகவல் அறிந்த கலால் துறை அதிகாரிகள், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையைச் சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களிடமிருந்து சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘எம்.டி.எம்.ஏ’ என்ற உயர்ரக போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் இருவரும் சட்டவிரோதமாகப் போதைப்பொருளைப் பதுக்கி வைத்து விற்று வந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
