“தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் என்னதான் மாயாஜாலம் செய்தாலும், திமுக தலைமையிலான கூட்டணி 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மெகா வெற்றி பெறுவது உறுதி” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக் கணக்குகளைக் கடுமையாக விமர்சித்த அவர், “எந்த மோடி மஸ்தான் வித்தையைக் காட்டினாலும் தமிழக மக்களிடம் அது பலிக்காது” எனச் சாடியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு மற்றும் புதிய கூட்டணிகள் குறித்துப் பேசி வருவதை எள்ளி நகையாடிய செல்வப்பெருந்தகை, மக்கள் செல்வாக்கு முழுமையாக திமுக கூட்டணி பக்கமே இருப்பதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்போம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸின் இந்த ‘210 பிளான்’ அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
