இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், பாகிஸ்தான் அணியின் தற்போதைய பந்துவீச்சு குறித்து மிகவும் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் வசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயப் அக்தர் போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோது பாகிஸ்தான் பந்துவீச்சு உலகையே அச்சுறுத்தியது. ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டதாக சேவாக் கூறியுள்ளார்.
இப்போதுள்ள பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களிடம் அந்த பழைய வேகமோ அல்லது துல்லியமோ இல்லை என்றும், அவர்கள் எளிதாக ரன்களை விட்டுக்கொடுப்பதாகவும் சேவாக் விமர்சித்துள்ளார். “அப்போதிருந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலாக இருந்தது, ஆனால் இப்போதுள்ள பவுலிங் அட்டாக் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை” என அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். சேவாக்கின் இந்த அதிரடிப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
