சமூக வலைதளங்களில் தற்போது ஒரு “க்யூட்” வீடியோ எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில், ஒரு குட்டிப் பெண் தனது பள்ளி வாகனத்திற்குச் செல்லும்போது, அந்த வீட்டின் செல்ல நாய் அவளுக்கு உண்மையான பாதுகாவலனாக (Bodyguard) செயல்படுகிறது. அந்தச் சிறுமி பையைத் தூக்கிக்கொண்டு நடக்கும்போது, கூடவே ஓடி வந்து அவளைப் பத்திரமாகப் பள்ளிப் பேருந்து வரை அழைத்துச் செல்கிறது. “எங்க வீட்டுப் பாப்பாவைப் பத்திரமா பார்த்துக்கோங்க” என்று சொல்வது போல, அந்த நாய் காட்டிய அன்பு காண்போரை நெகிழ வைத்துள்ளது.
Cutest Bodyguard ❤️ Dog Escorts Little Girl to School Bus and Even steps inside to Check if she is Safely seated ❤️🐕 pic.twitter.com/ST71Abk5xn
— Rosy (@rose_k01) March 13, 2026
ஆனால், அத்துடன் அந்த நாயின் கடமை முடிந்துவிடவில்லை. சிறுமி பேருந்திற்குள் ஏறியதும், தானும் உள்ளே ஏறிச் சென்று அவள் சரியாகத் தனது இருக்கையில் அமர்ந்துவிட்டாளா என்பதை ஒருமுறை உறுதி செய்துகொள்கிறது. அந்த நாயின் பொறுப்பையும், அறிவையும் பார்த்த பேருந்து ஓட்டுநரும் அங்கிருந்தவர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். “இந்தக் காலத்து மனுஷங்களை விட இந்த நாய் எவ்வளவோ மேல்” என இணையவாசிகள் இந்த வீடியோவிற்கு லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
