வாழ்க்கை சில நேரங்களில் எவ்வளவு கொடூரமானது என்பதற்கு 80 வயதான ரிச்சர்ட் ஒரு சாட்சி. ஓய்வு பெற்று நிம்மதியாக இருக்க வேண்டிய வயதில், குடும்ப கஷ்டம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக மீண்டும் ‘டோர் டேஷ்’ (DoorDash) நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு வந்துள்ளார். அவர் மூச்சிறைக்க மெல்ல மெல்ல படிகளில் ஏறி வந்து உணவு கொடுப்பதை வாடிக்கையாளரின் வீட்டு சிசிடிவி கேமரா படம் பிடித்துள்ளது. “இந்த வயசுல இவருக்கு இந்த கஷ்டமா?” என அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ரத்தக் கண்ணீரே வடித்துவிட்டனர். அந்த வீட்டின் உரிமையாளர், ரிச்சர்ட்டின் நிலையை அறிந்து அவருக்கு $200 டிப்ஸ் கொடுத்ததுடன், இணையத்தில் ஒரு நிதி திரட்டும் முயற்சியையும் தொடங்கினார்.
An elderly man named Richard came out of retirement to deliver food for DoorDash because he and his wife were struggling to pay their bills.
A customer watched on her doorbell camera as he slowly climbed the steps to deliver her order.
She later learned he was working again in… pic.twitter.com/LnpEeuWOiB
— Lucy (@TheLucyShow1) March 12, 2026
இந்த உருக்கமான சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவ, உலகம் முழுவதிலும் இருந்த முன்பின் தெரியாத மனிதர்கள், ரிச்சர்ட்டின் உழைப்பைக் கண்டு நெகிழ்ந்து நிதியை வாரி வழங்கினர். இதுவரை சுமார் 80,000 டாலருக்கும் மேல் (இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய்!) பணம் சேர்ந்துள்ளது. “இனிமே நீங்க வேலைக்கு போக வேணாம் தாத்தா.. நிம்மதியா ஓய்வு எடுங்க!” என மக்கள் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். ஒரே ஒரு சிசிடிவி வீடியோ, வறுமையில் வாடிய ஒரு முதியவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ள இந்த சம்பவம், ‘மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை’ என்பதை உரக்கச் சொல்லியுள்ளது!
