துருக்கியின் இஸ்மிர் (İzmir) நகரில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது, சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி மருத்துவ மாணவி ஓஸ்கே செரன் டெனிஸ் மற்றும் அவருக்கு உதவ முயன்ற இனான்ச் ஓக்டேமே ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், அலட்சியமாகச் செயல்பட்டதாக மின்சார வாரிய அதிகாரிகள் உட்பட 42 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஏற்கனவே கீழமை நீதிமன்றம் இவர்களுக்கு 4 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்திருந்த நிலையில், தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
İzmir’de sağanak sırasında elektrik akımına kapılarak hayatını kaybeden 2 kişinin davasında, istinaf mahkemesi 12 sanık için yeniden yargılama, Gediz Elektrik çalışanı 11 sanık için ise tahliye kararı verdi. pic.twitter.com/yFaBo0ly9c
— gdh (@gundemedairhs) March 13, 2026
நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி, சிறையில் இருந்த 11 அதிகாரிகள் அதிரடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது என்பதைத் துல்லியமாக ஆராய ஐடிஐ (İTÜ) மற்றும் ஓடிடியூ (ODTÜ) பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட புதிய நிபுணர் குழுவை நீதிமன்றம் அமைத்துள்ளது. “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?” என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கின் மறு விசாரணை வரும் மே 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
