சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்த தொலைநோக்குத் திட்டங்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் “இருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிற வகையில், மாநிலம் முழுவதும் மின்விளக்கு வசதிகளை மேம்படுத்தி வெளிச்சத்தை உறுதி செய்யும் பணியில் த.வெ.க. களம் இறங்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், அவற்றை முறைப்படி கண்காணிக்க பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, பாதுகாப்பான தமிழகத்திற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் இந்த வாக்குறுதிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில், நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
🚨One of the Best Scheme @TVKVijayHQ ❤ pic.twitter.com/0M8qaBCLRV
— KERALA VIJAY FANS CLUB (@KVFC_Official) March 8, 2026
“>
தமிழகத்தின் வீதிகள் ஒளிவெள்ளத்தில் மிதப்பதும், நவீன பாதுகாப்பு வளையத்திற்குள் பெண்கள் அச்சமின்றி பயணிப்பதும் போன்ற தத்ரூபமான ஏஐ காட்சிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே வைரலாகி வருகின்றன. வெறும் அறிவிப்போடு நிற்காமல், தொழில்நுட்ப ரீதியாக அந்த மாற்றத்தை முன்கூட்டியே காட்சிப்படுத்தியிருப்பது மக்களிடையே ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த வீடியோக்கள், த.வெ.க-வின் எதிர்காலச் செயல் திட்டங்களுக்கு ஒரு முன்னோட்டமாகவே அமைந்துள்ளன.
