விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராகப் பலரும் காரசாரமான கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், அதிமுகவின் செல்லூர் ராஜு எதிர்பாராத விதமாக விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார். இந்த விவாகரத்து விவகாரத்தைப் பயன்படுத்தி விஜய்யின் நற்பெயரைக் கெடுக்க திமுக திட்டமிட்டு முயற்சிப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்பு அதிமுகவைச் சிறுமைப்படுத்த திமுக என்னென்ன யுக்திகளைக் கையாண்டதோ, அதையேதான் தற்போது விஜய் விவகாரத்திலும் செய்து வருவதாகச் செல்லூர் ராஜு சாடியுள்ளார். அரசியல் ரீதியாக விஜய்யை எதிர்கொள்ள முடியாத திமுக, அவரது குடும்பப் பிரச்சனையைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ள கருத்து, தற்போது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
