தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று சிறப்பித்தார்.

இந்த விழாவில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவலுடன் கலந்துகொண்ட நிலையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான பல்வேறு அதிரடித் திட்டங்களை விஜய் அறிவித்தார்.

குறிப்பாக, பெண்களுக்குத் தேவையான மானியங்கள், மகளிர் சுயசார்பு மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டார்.

அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய், பெண்களைக் கவரும் வகையில் இந்த விழாவில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.