நாளை (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “உலகை இயக்கும் பேராற்றலான என் அன்புக்குரிய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திராவிட மாடல் அரசு எப்போதும் பெண்களின் உயர்வுக்காகவே செயல்பட்டு வருவதாகப் பெருமிதம் தெரிவித்துள்ள அவர், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தியுடன் ஒரு மிக முக்கியமான அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார். திராவிட மாடல் 2.0 ஆட்சியில், தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். மகளிர் தினப் பரிசாக வந்துள்ள இந்த அறிவிப்பு தமிழகப் பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
