சர்வதேசச் சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பல்வேறு உலகளாவிய காரணங்களால் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாகத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் விலை உயரும்போது நமது நாட்டிலும் அதன் தாக்கம் ஏற்படுவது இயல்பானது என்று குறிப்பிட்ட அவர், அதேசமயம் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது 503-வது வாக்குறுதியாகச் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையிலும், இன்றுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, விலை உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
