சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் முழுவதுமே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் அதிரடியாக குறைந்தது. குறிப்பாக இன்று காலை தங்கம் விலை ₹600 வரையில் சவரனுக்கு குறைந்த நிலையில் இன்று மாலை தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி திடீரென 1200 ரூபாய் வரையில் சவரனுக்கு அதிகரித்துள்ளது. இதனால் 22 ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,19,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14890 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு காலை ஐந்து ரூபாய் வரையில் தற்போது ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.