டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் அக்சர் படேல் செய்த மாயாஜால கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை ஹாரி ப்ரூக் பலமாக அடிக்க முயன்றார்.
பந்து உயரே எழுந்து எல்லைக்கோட்டை நோக்கிச் சென்றதால் அது சிக்ஸர் ஆகும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பாயிண்ட் திசையிலிருந்து மின்னல் வேகத்தில் ஓடி வந்த அக்சர் படேல், எல்லைக்கோட்டிற்கு மிக அருகில் பாய்ந்து அந்தப் பந்தைப் பிடித்தது ஸ்டேடியத்தையே அதிர வைத்தது.
இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஹாரி ப்ரூக், இந்த முக்கிய போட்டியில் வெறும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே தொடக்க வீரர் சால்ட் ஆட்டமிழந்த நிலையில், கேப்டனின் இந்த விக்கெட் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
अंग्रेज़ों के कैच बापू से बढ़िया कौन पकड़ेगा 🫡 Axar Patel 👏 #INDvsENGpic.twitter.com/RmTDLkSWxc
— Rj Kartik (@Rjkartik) March 5, 2026
“>
2022-ல் அறிமுகமான ஹாரி ப்ரூக், இங்கிலாந்து அணிக்காக இதுவரை 63 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1303 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
