தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், திருநெல்வேலி நான்குநேரியில் நடந்த பதறவைக்கும் சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதைக் கடுமையாக விமர்சித்தார். “நண்பர் ஒருவர் போட்டிருந்த அந்த ட்வீட் தான் இப்போதைய நிலைக்குப் பொருத்தமானது: ‘ஸ்டாலின் தொடரட்டும்.. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்!’ – இதுதான் தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஒரு முதலமைச்சராகச் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதால்தான், இத்தகைய கொடுமைகள் அரங்கேறுவதாகத் தனது உரையில் நேரடியாகவே அட்டாக் செய்தார்.
