வயது என்பது வெறும் எண்கள்தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 93 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் சுஷுமா என்ற மூதாட்டியின் வீடியோ இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இவர், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அதாவது சுமார் 25 ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் வசித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Kamel Jaber (@i__kamel)

ஒரு பெரிய நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றிய சுஷுமா, தனது 93 வயதிலும் சொந்த வேலைகளைத் தானே செய்துகொள்வதோடு, சைக்கிள் ஓட்டி ஆரோக்கியமாக வலம் வருகிறார்.

இவரது இளமைக்கும் முகப் பொலிவுக்கும் மிக முக்கியமான காரணம் இவரது வாழ்வியல் முறைதான். மிதமான உணவை மட்டுமே உண்பது, எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது மற்றும் சிறிய அளவில் மூட்டு வலி இருந்தாலும் அதற்கு ஆயுர்வேத சிகிச்சை மற்றும் அக்குபஞ்சர் முறைகளை மட்டுமே பின்பற்றுவதே தனது ரகசியம் என இவர் கூறுகிறார்.

போதைப் பழக்கம் ஏதுமின்றி, ஒரு இளம்பெண்ணுக்கே உரிய துடிப்புடன் இருக்கும் இந்தப் பாட்டியின் வீடியோ, இளைய தலைமுறைக்கு ஒரு பெரிய ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.