பஞ்சாப் மாநிலத்தில் தந்தை மகளுக்கு இடையிலான புனிதமான உறவைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தனது 15 வயது மகளிடம் அந்த நபர் தொடர்ந்து தவறாக நடக்க முயன்று வந்துள்ளார். தந்தையென்றும் பாராமல் அவர் செய்த அநாகரீகமான செயல்களால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, ஆரம்பத்தில் செய்வதறியாது திகைத்தாலும், இறுதியில் அவருக்குப் பாடம் புகட்டத் துணிந்தாள்.
இந்நிலையில் தனது தந்தையின் வக்கிரம் நிறைந்த அத்துமீறல்களை ரகசியமாகத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூகத்தின் முன் அவரது முகமூடியைக் கிழித்தெறிந்தாள். இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் “பெற்ற மகளையே சித்திரவதை செய்த அந்த நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இக்கட்டானச் சூழலிலும் பதற்றமடையாமல், ஆதாரத்தைத் திரட்டித் தனது பாதுகாப்பை உறுதி செய்த அந்தச் சிறுமியின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
