மேயர் மிஸ்டி ராபர்ட்ஸ் ஒரு நீச்சல் குள விருந்தின் போது 16 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தச் சிறுவனின் தாயாருக்கு மேயர் குறுஞ்செய்தி அனுப்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதிகாரத்தில் உள்ள ஒரு பெண் இத்தகைய செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் கோபத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள நிலையில், மேயர் மிஸ்டி ராபர்ட்ஸ் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் சிறுவர்களுக்கெதிரான இத்தகைய பாலியல் அத்துமீறல்கள் மன்னிக்க முடியாதவை என்றும், இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.