ஹரியானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான செயல் சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள ஒரு கிராமத்தில், மது போதையில் இருந்த ஒரு கும்பல், மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பசு மாட்டினை வலுக்கட்டாயமாக மதுவைக் குடிக்க வைத்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by StreetdogsofBombay (@streetdogsofbombay)

அந்த வாயில்லா ஜீவனின் வாயைப் பிளந்து மதுவை ஊற்றுவதும், போதையேற்றப்பட்ட அந்த பசுவை வண்டியை இழுக்கச் சொல்லி துன்புறுத்துவதும் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.

‘StreetdogsofBombay’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெளியான ஒரு மணி நேரத்திலேயே பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

ஹோலி பண்டிகை தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் நாளாகக் கருதப்படும் வேளையில், தெய்வமாக வணங்கப்படும் பசு மாட்டிற்கே மது ஊற்றி மகிழ்ந்த இந்த மனிதர்களின் செயலை விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.