தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலம் மற்றும் வேலூரைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க காவல்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் சுமார் 5,000 பேர் வரை கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு கருதி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

விஜய்யின் இந்த அடுத்தடுத்த மாவட்டச் சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.