அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் மார்ச் 4-ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இந்தப் கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.
இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க இந்த முக்கியமான கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
