நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவர், தனது மனைவி தமிழ்ச்செல்வியை (24) கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த சதீஷ் கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார், தமிழ்ச்செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற சதீஷை போலீசார் விரைந்து செயல்பட்டுக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.