கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு தனியார் வங்கி மேலாளர் ஷியாம் சுந்தர் என்பவர், தனது வங்கியில் பணிபுரிந்த ஹசீனா பேகம் என்ற பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, விஷம் குடிக்க வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹசீனா பேகத்தை நீண்ட காலமாகச் சுரண்டி வந்த மேலாளர், அவரது வீட்டிற்கே சென்று அவரைத் தாக்கி கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த ஹசீனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு துயரமான சம்பவத்தில், கர்நாடகாவின் சிவமொக்கா அருகே உரகதூரில் 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு வகுப்பிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அந்த மாணவர் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த மாணவரும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
