சிம்லா சமியானா பகுதியில் உள்ள அடல் மருத்துவ அறிவியல் கழக (AIMSS) வளாகத்தில், தெரு நாய் ஒன்று துண்டிக்கப்பட்ட ஒரு மனிதக் காலை வாயில் கவ்விக்கொண்டு சுற்றித் திரிந்த காட்சி அங்கிருந்தவர்களை உறைய வைத்தது.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயது நோயாளி ஒருவருக்கு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கால் அது என்பது தெரியவந்துள்ளது. மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, அந்த உறுப்பு ஒரு மஞ்சள் நிறப் பையில் வைக்கப்பட்டு கழிவு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

“>

 

ஆனால், பிப்ரவரி 21-ஆம் தேதி இரவு தூய்மைப் பணியாளர்கள் அந்த அறையைச் சரியாகப் பூட்டாமல் சென்றதால், உள்ளே புகுந்த நாய் அந்த உடல் உறுப்பைத் தூக்கிச் சென்றுள்ளது. இந்த விவகாரத்தைத் தீவிரமான அலட்சியம் எனக் கருதிய மருத்துவமனை நிர்வாகம், சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.