ரமலான் புனித மாதம் தொடங்கிவிட்ட நிலையில், முஸ்லிம் மக்கள் அனைவரும் அதிகாலையில் இருந்து மாலை இப்தார் வரை நோன்பு இருந்து வருகின்றனர். இப்தார் நேரத்தில் பழங்கள் மிக முக்கியத் தேவையாக இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அவற்றின் விலை விண்ணைத் தொட்டுள்ளது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வு்லாகர் ரிஸ்வான் என்பவர் பாகிஸ்தானில் எடுத்த வீடியோ ஒன்றில், அங்குள்ள பழங்களின் விலையைக் கேட்டு அவரே அதிர்ச்சியடைந்துள்ளார். சாதாரண வாழைப்பழத்தின் விலை 250 முதல் 450 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பப்பாளி 400 ரூபாய்க்கும் விற்கப்படுவதைக் கண்டு நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஆப்பிள் கிலோ 500 ரூபாய்க்கும், ரமலான் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பேரீச்சம்பழம் கிலோ 1200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களின் விலையில் ஒரு சில பழங்களை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த இந்திய நெட்டிசன்கள், “எங்கள் ஊரில் பப்பாளி வெறும் 40 ரூபாய்தான்” என்றும், “இவ்வளவு விலையேற்றத்தில் பாகிஸ்தான் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?” என்றும் கமெண்ட்களைத் தட்டி வருகின்றனர்.
