தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகளுக்காக முக்கிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அல்லது பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், முக்கியப் புள்ளிகள் களம் காணும் இந்த ஏரியாக்களைக் கவனிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுடன் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சத்யபாமாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த தேர்தல் பணிகளை ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுன் கவனித்தாலும், கொங்கு மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் செங்கோட்டையன் அந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்திச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.