சமீபத்தில் ஒரு பெண் தனது ராபிடோ  பயணத்தின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை எக்ஸ்  தளத்தில் பகிர்ந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரிடம், அந்த ராபிடோ ஓட்டுநர் தமக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.

அவரது கல்வித் தகுதியைப் பற்றி விசாரித்தபோது, அவர் கணிதப் பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெற்றவர் என்பது தெரியவந்தது. கடந்த 5-6 ஆண்டுகளாக அரசு ஆசிரியர் பணிக்காகத் தேர்வு எழுதி காத்திருந்த அவர், தனது அன்றாடத் தேவைகளுக்காக தற்போது பைக் டாக்ஸி ஓட்டி வருவதாகக் கூறியுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்தியாவின் தற்போதைய வேலைவாய்ப்பு சூழல் குறித்த விவாதத்தை இது கிளப்பியுள்ளது. பலரும் தங்களது இதே போன்ற கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

 

கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய நிறுவனத்தை மூடிவிட்டு தற்போது பிளிங்கிட் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் முதல், வெளிநாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் வரை பலரும் தங்களது கதைகளைக் கூறி வருகின்றனர்.

கல்வித் தகுதி இருந்தும் தகுந்த வேலை கிடைக்காதது மற்றும் திறமைக்கும் வேலைக்கும் இடையே உள்ள இடைவெளியே இதற்கு முக்கியக் காரணம் என இணையவாசிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.