புது தில்லியில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்ற ‘ஏஐ இம்பாக்ட் சமிட்’ மாநாட்டில் சுகாதாரக் குறைபாடு குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உணவகப் பகுதியில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் தான் பயன்படுத்தும் துடைப்பத்தை வெட்டுவதற்கு ஒரு கத்தியைப் பயன்படுத்தியுள்ளார்.

பின்னர் அதே கத்தியை உணவக ஊழியரிடம் கொடுக்க, அவர் அதைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சாண்ட்விச் வெட்டிக் கொடுத்ததைக் கண்டு அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்து அதனை வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இந்திய உணவகங்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

“இதுதான் இந்தியாவின் உண்மையான சுவையா?” என்றும், “சுகாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்” என்றும் இணையவாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“>

 

ஏற்கனவே விஐபி வருகைக்காகப் பாதைகள் அடைக்கப்பட்டதால் 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது எனப் புகார்கள் எழுந்த நிலையில், இந்தச் சுகாதாரச் சீர்கேடு விவகாரம் மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.