தமிழகத்தில் தெருக்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெற வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2025 டிசம்பர் மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும்பாலான வியாபாரிகள் இது குறித்த விழிப்புணர்வு இன்றி உரிமம் பெறாமல் உள்ளனர்.

எனவே, இனிவரும் நாட்களில் விற்பனையாளர்களிடம் உரிமம் இருக்கிறதா என அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதனை செய்வார்கள் என்றும், உரிமம் இல்லாதவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரிமத்தைப் பெற விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகக் கட்டணமின்றித் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகலாம். ஆண்டுக்கு ஒருமுறை இந்த உரிமத்தைப் புதுப்பிப்பது அவசியமாகும்.

மேலும், இடியாப்பத்தைத் தயாரிக்கும்போது தரமான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு விநியோகிக்கும்போது கையுறை மற்றும் தலையுறை போன்ற பாதுகாப்பு வசதிகளைக் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.