எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்துள்ள ஒரு காணொளியில், ஒரு பெண் தன் கையில் ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டும், மற்றொரு சிறுவனை அழைத்துக்கொண்டும் நிதானமாகச் சாலையில் நடந்து செல்கிறார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, அந்தப் பெண் மீது பயங்கரமாக மோதித் தூக்கி வீசுகிறது. இந்த விபத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோதுதான், அந்தக் காரை ஓட்டி வந்தது ஒரு சிறுவன் என்பது தெரியவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

​விபத்தை ஏற்படுத்திய அந்தச் சிறுவன், கூட்டத்தைப் பயன்படுத்தி நைசாகத் தப்பிச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த ஒருவர் அவனைத் துரத்திப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்தக் கொடூரமான விபத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “சிறுவர்களிடம் வாகனங்களைக் கொடுக்கும் பெற்றோர்கள் மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆவேசமான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.