எக்ஸ் (X) தளத்தில் பயனர் ஒருவர் வெளியிட்ட “சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் 101” என்ற பதிவு, இந்தியர்களிடையே பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், “ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் கன்டென்ட் கிரியேஷன் பக்கமே வரக்கூடாது; இது February (ஃபெப்ரவரி), Fab அல்ல; Shoes, Sooz அல்ல” எனக் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். இது எலைட்டிசம் (Elitism) மற்றும் பிறரைத் தாழ்த்திப் பேசும் மனப்பான்மை எனப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
This is in very poor taste if this is about @ lifeofpujaa /little_ordinary_things or some creator trying to build their social media space when their first language is not English. We could learn a thing or two from her. Since when did it become uncool to try??? You look stupid. https://t.co/k5wyxwgzXC pic.twitter.com/u3JkPLmL19
— Sakshi Narula (@mssakshinarula) February 17, 2026
குறிப்பாக, இந்த விமர்சனம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இன்ஃப்ளூயன்சர் புஜாரிணி பிரதான் (Pujarini Pradhan) என்பவரை மறைமுகமாகத் தாக்குவதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர். கிழக்கு மெதினிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல்லத்தரசியான புஜாரிணி, தனது எதார்த்தமான ஆங்கிலப் பேச்சின் மூலம் புத்தகம், சினிமா மற்றும் கிராமப்புற வாழ்க்கை குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். “உச்சரிப்பை விடச் சொல்ல வரும் செய்தியே முக்கியம்” என அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் ரசிகர்கள், ஆங்கிலம் தெரியாதவர்களைக் கேலி செய்யும் போக்கைக் கண்டித்து புஜாரிணியின் தன்னம்பிக்கையைக் கொண்டாடி வருகின்றனர்.
