பனாமா நாட்டில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தற்போது இணையத்தில் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. மதிய உணவு நேரத்தில் மேத்யூ என்ற ஏழைச் சிறுவனின் தட்டில் இறைச்சித் துண்டு இல்லாததைக் கவனித்த ஆசிரியை, “உன் தட்டில் இருக்க வேண்டிய கறி எங்கே?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுவன் மிகவும் அப்பாவித்தனமாகத் தனது முதுகில் இருந்த பையிலிருந்து ஒரு சிறிய கவரை எடுத்து, “இது என் அம்மாவுக்காக…” என்று கூறியுள்ளார்.

​தான் பசியோடு இருந்தாலும், தனக்குக் கிடைத்த நல்ல உணவை வீட்டில் வறுமையில் வாடும் தனது தாயும் சுவைக்க வேண்டும் என்று அந்தச் சிறுவன் நினைத்த விதம் அங்கிருந்த அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்தச் சிறுவனின் உயர்ந்த குணமும், தாய் மீதான அளவற்ற பாசமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், “வறுமையிலும் ஒரு சிறுவனின் பெரிய உள்ளம்” என உலகெங்கும் உள்ள மக்கள் மேத்யூவைப் பாராட்டி வருகின்றனர்.