சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகப் பிரமுகர் கண்ணன் சனிக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் B பிரிவு குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த கண்ணன், முன்னர் அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு சிவா என்பவரைக் கொலை செய்த வழக்கில் கண்ணனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொலையுண்ட சிவாவின் சகோதரர் மகன் தலைமையிலான கும்பல் ஒன்று நேற்றிரவு கண்ணனைச் சூழ்ந்து வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
