சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு கொடூரமான வீடியோ, இணையவாசிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் மிகச்சிறிய குழந்தைக்கு வலுக்கட்டாயமாகப் மதுபானம் (Beer) புகட்டுவதோடு, சிகரெட் பிடிக்கவும் வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த மனிதாபிமானமற்ற செயல் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
SHOCKING | Man seen giving beer and cigarette to small child – bike number RJ25 SS 8392 clearly visible. pic.twitter.com/2BmRLUkNlj
— The Tatva (@thetatvaindia) February 19, 2026
இந்த வீடியோவில் ஒரு மோட்டார் சைக்கிள் இடம்பெற்றுள்ளது, அதன் பதிவு எண் (RJ25 SS 8392) தெளிவாகத் தெரிகிறது. இது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வண்டி என்பதால், இந்தச் சம்பவம் அங்குதான் நடந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ராஜஸ்தான் காவல்துறையினரை டேக் செய்து பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருவதோடு, அந்தச் சிறுவனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய அந்த நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
