நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மைக் ஹிஜ்மேன் என்ற பெண் பயணி, தனது மோட்டார் சைக்கிளில் தனியாக இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறார். ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறப் பகுதியில் பயணித்தபோது, இரவு தங்குவதற்காக ஒரு வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் தனது கூடாரத்தை அமைத்துக்கொள்ள அனுமதி கேட்டார்.
அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியாததால் தனது மகனை அழைத்து வர, அந்த இந்தியக் குடும்பம் காட்டிய அன்பு தற்போது இணையதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது.
வெறுமனே தோட்டத்தில் தங்க அனுமதி கேட்ட அந்தப் பெண்ணை, பாதுகாப்புக் கருதி அந்த குடும்பத்தினர் தங்களது வீட்டிற்குள்ளேயே வருமாறு வற்புறுத்தி அழைத்தனர். அவருக்குச் சுடச்சுட தேநீர் மற்றும் வீட்டில் சமைத்த உணவை வழங்கி உபசரித்தனர்.
View this post on Instagram
“>
விருந்தினரே தெய்வம் என்ற இந்தியப் பண்பாட்டிற்குச் சான்றாக அமைந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், கிராமப்புற இந்தியாவின் விருந்தோம்பலைப் பாராட்டியும், அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த குடும்பத்தை வாழ்த்தியும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
