தஞ்சாவூரில் நாளை நடைபெற உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு இரும்புக் கொடிக்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரக் கம்பி மீது கம்பம் உரசியதில் சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.