தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத் என்பவர், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது.

இவரது மனைவி சிரிஷா, குடிப்பேட்டையில் உள்ள 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்; அவர் தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு கதறி அழுதபோதும் ரவி பிரசாத் இரக்கமின்றித் தாக்கியுள்ளார்.

“>

 

தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரவி பிரசாத், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதால் தற்போது அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு காவலராகவும், உயர் சாதி ஆணாகவும் இருக்கும் ஆணவத்தில் அவர் செய்த இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.